கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல்.. தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் காய்ச்சல் வருவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.
அதில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவரிடம் இருந்து மாத்திரைகளை சேகரித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனபகுதிக்குள் கால்நடைகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கால்நடைகள் தினமும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் கால்நடை கூடாரங்களில் கிரிமி நாசினை தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





