போலீஸ் போல நடித்து பணம் பறித்தவர் லாரியில் மோதி பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர் நிஜ போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். பள்ளி மேட்டை சேர்ந்த அஜித் குமார் என்பவர் எஸ்ஐ போல போலீஸ் உடை அணிந்து வேலம்பாளையம் என்ற இடத்தில் வாகன ஓட்டிகளை மறித்து பரிசோதனை எனும் பெயரில் பணம் வசூலித்து உள்ளார்.
இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு நிஜ போலீசார் சென்றுள்ளனர் . அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது பைக்கில் அதிவேகமாக அஜித்குமார் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது பைக் மோதியதில் அஜித்குமார் உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்தபோது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





