--- --:--:-- --

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!

3

மிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதன் காரணமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாகவும், இயல்பை விட குறைவாகவும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon