தன்னைத் தானே விவாகரத்து செய்த மாடல் அழகி..!
தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி தன்னை தானே விவாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட காதல் முறிவால் விரக்தி அடைந்து தன்னை தானே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். அப்போது அது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது. ஆனால் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட 90 நாட்களுக்குள் விவாக ரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.
மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாகவும் தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர் விவாகரத்து செய்து கொள்ளும் வரை தான் மகிழ்ச்சியுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.







