--- --:--:-- --

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3, ம.ம.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

mmk

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது; இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கையெழுத்திட்டனர்.

 

திமுக கூட்டணி கட்சிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகியன பங்கேற்றன. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவானது.

 

இது தொடர்பான ஒப்பந்தத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், 5 தொகுதிகளை கேட்டோம். எனினும், சூழ்நிலையை கருதி 3 தொகுதிகளுக்கு சம்மதித்தோம். ஐ.யூ.எம்.எல். ஏணி சின்னத்தில்தான் போட்டியிடும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.

 

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம், ஸ்டாலின் – ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா முன்னிலையில் கையெழுத்தானது. இதனிடையே, அடுத்ததாக மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தரப்பினர் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். இதில், மல்லை சத்யா தலைமையிலான மதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon