முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சுவரொட்டியில் வாழ்த்து..!
ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை வாழ்த்தி முக அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், ஸ்டாலினின் அண்ணனுமான முக அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தவர்.
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதையொட்டி இணைந்த இதயங்கள் எனக் குறிப்பிட்டு முக அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.






