கொரொனா பாதிப்பு தொடர்பாக ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்.!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். கொரொனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பின்போது தமிழகத்தில் உள்ள தற்போதைய சூழல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கொரொனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முகஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






