ஜெ. அன்பழகன் உடல்நிலை குறித்து நேரில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் உடல் நலம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார். கொரொனாவால் பாதிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ, ஜெ அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து தற்போது ஆக்சிஜன் அளவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அன்பழகன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் அவரது குடும்பத்தினரிடமும் நலம் விசாரித்தார்.






