இன்ஸ்டாகிராம் மூலம்காதலிப்பதாக கூறி நகை மற்றும் பணத்தை வாங்கி மோசடி செய்த இளைஞர்!
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஆசை காட்டி மாணவியிடம் பணம் நகையை பறித்த இளைஞரை காவலர்கள் கைது செய்துள்ளனர். வில்லாபுரம் மகாலிங்கபுரம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞருக்கு மாணவி ஒருவருடன் இன்ஸ்டகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அந்த மாணவியிடம் விக்னேஷ் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாக கூறி நகை மற்றும் பணம் வாங்கியுள்ளார். ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாக கூறி மாணவியை ஏமாற்றியதாக தெரிகிறது. இதனை அடுத்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.






