தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த அமைச்சர்கள்..!
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் பெரியசாமி மற்றும் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நிவாரண பொருட்களை அனுப்பினார்.
அவர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சிக்கு வந்து சேர்ந்தது. இதுவரை 25 லாரிகளில் இருந்து நிவாரண பொருட்கள் வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





