தமிழக ஆளுநர் குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம்..!
தமிழ்நாட்டில் சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர் பொன்முடி படிக்கும்போதே மாணவர்களுக்கு இயற்கை மற்றும் தாவரங்கள் மீது உள்ள பற்றை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்க பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் தமிழ்நாடு ஆளுநர் தமிழக சித்தா பல்கலைகழகத்திற்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.






