சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பாஸ்கரன்..!
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலககள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறன் உடைய 296 பயனாளிகளுக்கு ரூபாய் 11,33,734 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கதர் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத்திறன் உடைய நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் 296 பயணிகளுக்கு ரூபாய் 11,33,734 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் கூட்டுறவு அச்சக சங்க தலைவர் சசிக்குமார் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.







