--- --:--:-- --

அமைச்சர் ஜெயக்குமார் போல் மிமிக்ரி பேசி வசூல் வேட்டை..!

9

பகலில் பணமோசடி, இரவில் பாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 50 வயது முகமது ரபிக்கின் திருவிளையாடல் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக கூறி கிண்டி தொழிலதிபர் துரைசாமி என்பவரிடம் கட்சி விழாவிற்காக 80 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்குமாறு முகமது, ஜெயக்குமார் குரலில் பேசியுள்ளார்.

 

இதை உண்மை என நம்பிய துரைசாமி 30,000 ரூபாய் வரை கொடுக்க சம்மதித்துள்ளார். பேரவை துரைசாமிக்கு முகமது ரபீக் தனது வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி வைத்துள்ளார். இருந்தாலும் முகம்மது ரஃபி நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த துரைசாமி விசாரணை நடத்தக்கோரி கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 

போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் முகமது ரபிக் சென்னை மட்டுமல்லாது மதுரை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பல அமைச்சர்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தி தொழில் அதிபரை மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 2017இல் ராதாகிருஷ்ணன் பெயரிலும் முகமது ரபீக் மோசடி செய்துள்ள தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

2014-இல் ஐந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் தனது பண மோசடி குற்றத்தை அரங்கேற்றிய இவர் தற்போது பல லட்சங்களை சுருட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் மீது தமிழகத்தில் 15 இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .மோசடி பணத்தை கொண்டு இவர் தண்டையார்பேட்டையில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பண மோசடி புகாரில் சிக்கிய முகமது ரபிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon