--- --:--:-- --

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம்..!

6

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அங்கு 2.2 ஏக்கர் பரப்பளவில் முப்பத்தி ஒன்பது கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

கருணாநிதியின் அரும் பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்க்கையும் சாதனைகள் மற்றும் சிந்தனைகளை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நவீனமயமாக நினைவிடம் அமைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விரிவான திட்ட அறிக்கையை கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதியளித்துள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு நினைவிட கட்டுமானப் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon