--- --:--:-- --

புதுச்சேரியில் சுமார் 1000 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்கள்..!

5

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் சுமார் 1000 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் திருக்கை மீன்கள் உலா வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையம் நடத்தி வரும் அரவிந்த் என்பவர் தனது பயிற்சி மைய வீரர்களுடன் கடற்கரையிலிருந்து சுமார் 7 மீட்டர் தூரத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மெகா சைஸ் திருக்கை மீன்கள் அங்கும் இங்கும் உலாவரும் காட்சிகளை படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார்.

 

தற்போது கொரொனா தொற்று காரணமாக பொதுமக்கள் வருகை இன்றி குப்பைகள் இன்றி தூய்மையாக காணப்படுவதால் ஆழ்கடலில் இருக்கும் இந்த வகை உயிரினங்கள் கடற்கரையை ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon