மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மருத்துவ மாணவி ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த திமுக இளைஞரணி நிர்வாகி வினோத் குன்னூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வினோத்தும் தானும் மூன்று வருடமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் பின் வினோத் நடவடிக்கைகள் பிடிக்காமல் விலக நினைத்த பொழுது முன்பு நெருங்கி பழகியிலே வைத்து வினோத் மிரட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 2ம் தேதி ஸ்ரீநிதி துக்கிட்டு கொண்டார்.





