--- --:--:-- --

தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலான மழை..!

37

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நான்காவது நாளாக தொடர்ந்து மழை பெய்துள்ளது.

 

கீழப்பலூர், சுத்தமல்லி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்ததால் விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சில நாட்களாக மழை தொடர்வதால் பயிர் சாகுபடிக்கு பெரிதும் உதவும் என்று விவசாயிகள் கூறினர்.

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூரில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon