பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!
நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவம்பர் 23ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதல் நாள் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் புயல் காரணமாக கலந்தாய்வை மருத்துவ கல்வி இயக்ககம் ஒத்திவைத்து இருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் தொடங்கும் கலந்தாய்வில் பங்கேற்க நீட் தேர்வில் 630 முதல் 610 வரை மதிப்பெண்கள் பெற்ற 389 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2,747 இடங்களில் 307 இடங்கள் நிரம்பியுள்ளன. 15 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,061 இடங்களில் ஒரு இடம் மட்டும் நிரப்பப்பட்டுள்ளது.







