--- --:--:-- --

திருமணம், குழந்தை பிறப்பு..! 3 ஆண்டு ஓய்வுக்குப் பின் முதல் போட்டியில் சாதித்த சானியா மிர்சா!!

2

மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், தாம் களமிறங்கிய சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா .

 

இந்திய நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடி பல பட்டங்களை வென்றவர்.ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியா மிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இந்தியா சார்பில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார்.

 

கர்ப்பமானதால் கடந்த 2017 முதல் டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்சா பங்கேற்காமல் இருந்தார். அவருக்கு இஷான் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 2020-ம் ஆண்டில் டென்னிசில் தமது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஹோபர்ட் உலக டென்னிஸ் தொடரின் இரட்டையர் போட்டியில், உக்ரைன் நாட்டின் நாடியா கிசேநோக் உடன் ஜோடி சேர்ந்து I ஆடினார். சுற்று ஆட்டங்களிலும், காலிறுதி, அரையறுதி போட்டிகளிலும் வென்று இந்த ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

இன்று ஹோபர்ட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள சீனாவின் சாய் பெங்க் – சாய் ஜாங்க் ஜோடியுடன் சானியா ஜோடி பலப்பரீட்சை நடத்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா ஜோடி,இறுதியில் 6- 4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இரட்டையர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது

 

இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தாம் பங்கேற்ற முதல் போட்டியிலேயே சானியா மிர்சா சாம்பியன் பட்டம் பெற்று தமது அபார திறமையை மீண்டும் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 33 வயதான சானியா, குழந்தை பெற்ற பின்னரும் டென்னிசில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து சாதனைகள் படைப்பது உறுதி என்றே தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon