மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பிப்ரவரி முதல் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் நேரடியாக வெளியாகும்.





