மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது..!
மன்மோகன் சிங் உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் உடல் நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவருக்கு வழக்கமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன்சிங் கடந்த ஏப்ரல் மாதம் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.







