தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது!
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பேக்ஸ் அருகில் கொடிக்குளம் பஸ் ஸ்டாப் அருகே 13.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஷேக் அப்துல்(26) என்ற நபரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சுமார் 1.392 கி.கிராம் கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





