--- --:--:-- --

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த நபர் கைது!

6

திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே 21.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அருண்பாண்டி(20) என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சுமார் 1.100 கி.கிராம் கைப்பற்றப்பட்டது. அருண்பாண்டியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon