தமிழ்நாடு காங்கிரஸில் முக்கிய மாற்றம்..!
தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளராக கிரிஷ் ஜோடன்கரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
அந்தப் பொறுப்பிலிருந்த அஜோய் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





