மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், முதியோர் இல்லங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்!!
ஊரடங்கு உத்தரவு காரணமாக,மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லங்களுக்கு அரிசி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் மணிகண்டன்,மதுரையில் மாநகராட்சி முதியோர் இல்லங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி வைத்தார்.
கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கை முன்னிட்டு சுய தனிமை சூழலில் உள்ள நிலையில் மதுரை திருநகர் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு 25 கிலோ சாப்பாட்டு அரிசியும், சிம்மக்கல் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களும் அவசர தேவை இருப்பதாக தகவல் வந்தது.
இதனைத் தொடர்ந்து தன்னார்வலருக்கான அடையாள அட்டை வைத்துள்ள அசோக்குமாரை அழைத்து அவர் மூலமாக அந்தந்த முதியோர் இல்லங்களுக்கு பொருட்களை அனுப்பி வைத்தனர்.






