--- --:--:-- --

கொரொனாவுக்கு தமிழகத்தில் மதுரையை சேர்ந்தவர் பலி!

1

மதுரையைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் சில நாட்களுக்கு முன்பு தொடர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த ஒருவர் கொரொனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இவருக்கு உடலில் ஏற்கனவே சிஓபிடி என அழைக்கப்படும் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தன. இதனால் நேற்று மாலை முதலே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்த நிலையில் நள்ளிரவில் எவ்வித பலனும் இன்றி உயிரிழந்தார். இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த 54 வயது நபர் அண்மையில் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதியான நாள் முதல் அவரது மனைவி மற்றும் மகன்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

 

இதே போன்று அவர் வழக்கமாக செல்லும் மசூதியில் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், நெருங்கிய உறவினர்களை அடையாளம் காணும் பணி ஏற்கனவே நடைபெற்று வந்தது. கடந்த ஒன்பதாம் தேதி சுமார் 60 பேர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்தார். ஆகையால் அந்த 60 பேரையும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தது.

 

இதேபோன்று தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த 12 மத குருமார்களை அவர் அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். அவர்களில் இரண்டு பேர் தற்போது கொரொனா அறிகுறியுடன் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

உயிரிழந்த நபரின் உடல் பாதுகாப்புடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவிலேயே இறுதி சடங்கும் நடைபெற்றது.

Leave a Reply

Right Menu Icon