--- --:--:-- --

மீண்டும் ஷாக் கொடுத்த மதுரை எய்ம்ஸ்.. அனுமதி இன்றி கட்டுமான பணி தொடக்கம்..!

4

துரையின் கட்டுமான பணிகள் உரிய அனுமதியின்றி நடைபெறுவதாக வெளியான தகவலுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி பல ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில் மதுரை கட்டுமான விவகாரத்தில் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

 

அதில் தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து நடவடிக்கைகளும் விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும் கட்டுமானத்திற்கு முந்தைய செயல்பாடுகள் என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்ததும் முக்கிய கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon