மதுபான கூட வசதிகளுடன் மீண்டும் சொகுசு சுற்றுலா ரயில் ஜனவரியில் இயக்கம்..!
மசாஜ் மையம் மற்றும் மதுபான கூட வசதிகளுடன் மீண்டும் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயில் வருகிற ஜனவரி மாதம் இயக்கப்படுகிறது. பெங்களூருவிலிருந்து புறப்படும் இந்த ரயில் கர்நாடகா – கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு இயக்கப்படுகிறது.
பிரைடு ஆஃப் கர்நாடகா என்ற பெயரில் ஆறு இரவுகள் கொண்ட 7 நாள் பயணமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. தற்போது ஐஆர்சிடிசி அமைக்கப்படவுள்ள இந்த ரயிலில் மசாஜ் மையம், மதுபான கூடம், நவீன உணவு கூடங்கள் உட்பட பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.






