--- --:--:-- --

தனிமையில் இருந்த புகைப்படங்களை வைத்து மிரட்டிய காதலன்!

11

கன்னியாகுமரி அருகே இளம் பெண்ணுடன் தனிமையில் எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசரவிளை பகுதியை சேர்ந்த இளம்பெண் வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். வெளிநாடு செல்வதற்கு முன் காட்டு புதூரை சேர்ந்த மார்டின் கணேஷ் என்பவருடன் முகநூல் மூலம் பழகி காதலித்துள்ளார்.

 

இந்நிலையில் அப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய திட்டமிட்டதால் அந்தரங்கமாக எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாக கூறி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon