--- --:--:-- --

ஊரடங்கு உத்தரவால் 80 வயது மூதாட்டி பசியால் வாடி உயிரிழந்த சோகம்!

12

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் தனித்திருந்த 80 வயது மூதாட்டி பசியால் உயிரிழந்த சோகம் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. திருவண்ணாமலையும் முத்து விநாயகர் கோவில் தெருவில் கனகவல்லி , கணவர் ராஜபாதர் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார்.

 

முதியோர் உதவித்தொகை பெற்று தனது வாழ்க்கையை நகர்த்தி வந்தவர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வந்துள்ளார், வீட்டின் அருகில் இருந்தவர்கள் அவ்வப்போது உணவு அளித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மூதாட்டி கனகவல்லி வெளியே வரவில்லை.

 

இதையடுத்து அருகில் வசித்த ஒரு ஜன்னல் வழியே பார்த்தபோது மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon