--- --:--:-- --

காதலியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் மற்றும் 80 வயது முதியவர்!

12.1

பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியில் வீடியோ எடுத்து மிரட்டி வந்த 80 வயது முதியவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் சர்வதேச தொடர்பு அம்பலம் ஆனது எப்படி? வரலாற்று நகரமான ஹைதராபாத்தில் நடக்கும் குற்றங்கள் மிக வினோதமானது. ஒரு பக்கம் முன்னேற்றத்தில் முகமாக காட்சியளித்தாலும் இந்த நகரில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக நகர போலீசார் கூறுகிறார்கள்.

 

அண்மையில் அம்பலமான குற்றச் சம்பவம் ஒன்று அந்த நகரத்திற்கும் சர்வதேச நாடுகளுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியுள்ளது. புகைப்படத்தில் உள்ள இருவரும் கூட்டணி அமைத்து பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இருவரும் சிக்கியது எப்படி? ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற வெலர் குடியிருப்பில் வசித்து வரும் 80 வயதான இவரது பெயர் முகமது சலீம்.

 

இளைஞர் அப்துல்லா என்பவர் பணியிடத்தில் பழக்கமான பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமது உறவினரான முகமது சலீமிடம் சென்ற காதல் ஜோடிகள் அவரிடம் உதவி கேட்டுள்ளனர். இப்போதைக்கு பதிவு திருமணம் செய்ய முடியாது ஊரடங்கு முடிந்த பிறகு நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

அதுவரைக்கும் எனது வீட்டிலேயே இருவரும் தங்கி விடுங்கள் என்று அவர் கூறி இருவருக்கும் உதவி செய்துள்ளார். தனது காதலனின் உறவினர் வீடு என்பதால் அந்தப் பெண்ணும் நம்பி அங்கு தங்கியிருந்தார். சில நாட்களில் வீட்டில் தங்கியிருந்த காதலிக்கு காதலன் குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

 

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாத அளவிற்கு அந்தப் பெண் மயங்கி விழுந்தார். அப்போது காதலனும் 80 வயது சலீமும் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்த இருவரும் மயக்கம் தெளிந்த பிறகு அந்தப் பெண்ணிடம் காட்டி மிரட்டியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு அஞ்சாத அந்த பெண் போலீஸில் புகார் அளித்ததாக கூறி விட்டு, தப்பியுள்ளார்.

 

விஷயம் கை மீறிப் போவதை உணர்ந்த சலீம் தனது வீட்டில் இருந்த பொருட்களை பெண்ணொருவர் திருடிவிட்டு ஓடியதாக போலீசில் புகார் அளித்தார். ஆணையர் அஞ்சலி குமாரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். சோதனையில் பெண் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து சலீம் மற்றும் காதலனாக நாடகமாடி அப்துல் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

 

விசாரணையில் சலீமிற்கு நான்கு மனைவிகள் இருவரும் அனைவரும் அரபு நாடுகளில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் வேலைக்கு செல்லும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தன்னிடம் சிக்கும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து துபாயில் உள்ள பணக்காரர்களுக்கு விற்பனை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon