--- --:--:-- --

ஆணவக் கொலை செய்யப்படலாம் என காதல் ஜோடி அச்சம்..!

8

காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பாதுகாப்பு கேட்டு நாகை எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் பகுதியில் அரசாணி குலத்தை சேர்ந்த சௌமியாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

 

கல்லூரியில் படிக்கும் பொழுதே இருவரும் காதலித்த நிலையில் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் சகோதரர் தொலைபேசியில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon