--- --:--:-- --

சின்னத்திரை நடிகை ஹேமாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை..!

7

சின்னத்திரை நடிகை ஹேமா தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றிய வீடியோவை தனது யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 

பிரபல சின்னத்திரை நடிகை ஹேமாவின் இயல்பான பேச்சும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல் இவருக்கு தனியாக இணையத்தில் ஃபேன்ஸ் பக்கம் உள்ளதோ அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் சமயத்தில் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.

 

அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஹேமா இந்த யூடியூப் சேனலில் எனக்கு ஆபரேஷன் என்று டைட்டிலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் ஹேமாவுக்கு என்ன ஆனது என வீடியோவை கிளிக் செய்தனர்.

 

அந்த வீடியோவில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் டெஸ்ட் எடுத்தது அறுவை சிகிச்சை தியேட்டருக்கு சென்றது என பல விஷயங்களை ஹேமா ஷேர் செய்திருந்தார். கடைசியில் தனக்கு என்ன அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்கிற விஷயத்தை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

 

சில மாதங்களாக ஹேமாவின் கழுத்துக்கு கீழ் பகுதியில் 4 சென்டி மீட்டர் அளவுக்கு கட்டி ஒன்று இருந்துள்ளது. இதைப்பற்றி மருத்துவரிடம் பரிசோதனை செய்த பின்னர் இது கேன்சர் கட்டியாக மாறி விடுமோ என பயந்து உள்ளார்.

 

கட்டியை நினைத்து தூக்கம் இல்லாமல் தவிர்த்துள்ளார். குடும்பத்துடன் சேர்ந்து ஆலோசித்த பின்பு கட்டியை நீக்க முடிவு எடுத்துள்ளார். அதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தான் அது. இந்த அறுவை சிகிச்சை பற்றி ரசிகர்களுடன் ஷேர் செய்த ஹேமா பெண்கள் தங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகளை அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும், உடனே மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.

Right Menu Icon