ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது என கடிதம் எழுதிய இபிஎஸ்..!
ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக சட்டத்திருத்தங்கள் காலாவதி ஆகி விட்டதால் ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் கடந்த 27-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்து இருந்து கடிதம் எழுதுவது ஏற்புடையதாக இல்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து விட்டு தற்போது இப்படி ஒரு கடிதத்தை அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.






