மரத்தில் மோதி விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்..!
சிவகங்கையில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மரத்தின் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவகங்கை இளையான்குடி சாலையில் மரத்தின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்திற்குள்ளானது.
பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இருவர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





