இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 80.9% ஆக உயர்வு: அமைச்சர்
இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 2023-24 ஆம் ஆண்டில் 80.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 74% ஆக இருந்தது. அரசின் தொடர்ச்சியான கல்வித் திட்டங்கள் மற்றும் முயற்சிகளால் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்றார்.





