ஆம்ஸ்ட்ராங் கொலை போல் உனக்கும் நடக்கும்..திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..!
மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிக்கு whatsapp வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக உள்ளவர் அகமது சவாலியுல்லா கட்சியில் அடி எடுத்து வைத்த சில மாதங்களிலேயே அந்த பொறுப்பை அவர் பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் மூலம் மூன்று முறை கொலை மிரட்டல் வந்துள்ளது.
கடைசியாக வந்த வாய்ஸ் மெசேஜில் அகமது ஷா வலியுல்லா அலுவலக வாயிலில் வரும் 17ஆம் தேதி பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதன் பிறகும் அரசியல் செய்வதற்காக தனது ஏரியாவிற்குள் வந்தால் ஆம்ஸ்ட்ராங் நடந்ததை விட மோசமாக நடக்கும் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பாக திமுக நிர்வாகி தரப்பினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.





