--- --:--:-- --

அனல் பறக்க வாக்கு சேகரிப்பு… தலைவர்கள் இன்று சொந்தத்தொகுதிகளில் பிரசாரம்

EPS Stalin 06

சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் சொந்தத் தொகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்:

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எடப்பாடி தொகுதி (சேலம்)

 

துணை முதல்வர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: போடி (தேனி)

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் தொகுதிகள்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தென்காசி, நாங்குநேரி

 

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்: தாராபுரம் (திருப்பூர்)

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கந்தர்வகோட்டை.

 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: திருத்துறைப்பூண்டி தொகுதி.

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்: கும்பகோணம், கீழ்வேளூர், மயிலாடுதுறை.

 

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: கோவில்பட்டி.

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: கோவை தெற்கு.

 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ஆவடி, மயிலாப்பூர், ராயபுரம், திரு.வி.க.நகர்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திருவொற்றியூர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon