--- --:--:-- --

நடிப்பதை நிறுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்!

2

டிகை லட்சுமி ராமகிருஷ்ணனை நமக்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் அதிகம் தெரியும். அது மட்டுமின்றி அவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களில் அவர் இயக்கி நடித்து இருக்கிறார்.

 

இருப்பினும் தற்போது சில வருடங்களாக லட்சுமி ராமகிருஷ்ணன் எந்த படங்களிலும் நடிப்பது இல்லை. அதற்கான காரணத்தை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

 

வனிதா பீட்டர் பால் திருமணம் சர்ச்சையான போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்கள் கூறி இருந்தார். அப்போது ஒரு youtube சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணணின் லைவ் பேட்டியில் இடையில் வந்த வனிதா மிகவும் மரியாதை குறைவாக அவரை பேசிவிட்டார்.

 

“அதை தற்போது நினைத்தாலும் அருவருப்பாக இருக்கிறது, ஏண்டா நடிக்க வந்தோம் என இருந்தது” என கூறிய லட்சுமி, அதற்கு பிறகு தான் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என கூறி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon