கொரொனா அச்சத்தால் ஆடுகளுக்கு முக கவசத்தை அணிவித்துள்ள விவசாயி!
விலங்குகளுக்கும் கொரொனா பரவும் என்ற செய்தி வெளிவந்ததை அடுத்து தெலுங்கானாவில் கால்நடை விவசாயி ஒருவர் தனது ஆடுகளுக்கு முகக் கவசங்கள் அணிவித்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இது இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய பூங்காக்களிலும் வனவிலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் வசித்து வரும் வெங்கடேஸ்வரராவ் என்ற கால்நடை விவசாயி தான் வளர்த்து வரும் 20 ஆண்டுகளுக்கு முகக் கவசம் அறிவித்துள்ளார். இந்த ஆடுகளை நம்பியே தன் குடும்பம் இருப்பதால் அவரின் பாதுகாப்பு கருதி முக கவசம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.







