தொழிலதிபரை கொன்று விட்டு கோடிக்கணக்கில் பணம், நகை கொள்ளை..!
பெங்களூருவில் தொழிலதிபரை கொன்றுவிட்டு நகைகளை அள்ளி சென்றதாக வேலைக்காரர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மின்னணு பொருட்கள் விற்பனையகம் நடத்திவந்த ஜார்ஜ் கோட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்பதால் உறவினர்கள் காவல்துறை உதவியுடன் உள்ளே சென்ற பொழுது உடல், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். விசாரணை செய்த காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரது கூட்டாளிகள் 3 பேர் கைது செய்தனர். அவர்களிடம் எட்டே முக்கால் கிலோ தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி நகைகள், 53 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






