--- --:--:-- --

விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் வாகனம்..!

2

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் சென்ற பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளாகின. முதலமைச்சர் கார் தலைநகர் திருவனந்தபுரத்தில் எம்.சி ரோட்டில் இருந்துசென்று கொண்டிருந்தார்.

 

முதலமைச்சர் இருந்த வாகனத்திற்கு முன்னும் பின்னும் அவரது பாதுகாப்பு வாகன வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். வாகனங்கள் ஜங்ஷன் இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இந்த வாகனங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென வலதுபுறமாக திரும்பினார்.

 

முதலமைச்சர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் சென்ற ஐந்து வாகனங்கள் மோதி கொண்டன. இதனால் முதலமைச்சர் உட்பட வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 

Right Menu Icon