கேரளாவில் பட்டாசு வெடித்து தீ விபத்து: 150 பேர் காயம்; 10 பேர் கவலைக்கிடம்!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள வீரர்காவு என்ற கோயிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 150 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அனைத்து பட்டாசுகளை ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தனர் காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.





