--- --:--:-- --

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவின் செயலாளர் தற்கொலை முயற்சி..! காரணம் என்ன..?

5

ர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ்.

 

இவர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 28ஆம் தேதி அவர் முதலமைச்சர் எடியூரப்பா அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

இதனையடுத்த முதலமைச்சர் எடியூரப்பா தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சந்தோஷையும் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு சந்தோஷ் தனது வீட்டின் அறையில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சந்தோஷ் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon