சபரிமலையில் 46 பேருக்கு கொரொனா பாசிடிவ்..!
சபரிமலையில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் தரிசனம் முடிந்து சென்ற பக்தர்கள் ஒருவருக்கு கூட தொற்று இல்லை என்று கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் கொரொனா விதிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வரையிலான 12 நாட்களில் 13 ஆயிரத்து 529 பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பியுள்ளனர்.
நிலக்கல்லில் நடத்திய சோதனையில் பக்தர்கள் காவல் துறையினர் பணியாளர்கள் 37 பேருக்கும், சன்னிதானத்தில் 9 பேருக்கும் என 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் தரிசனம் முடித்து சென்ற பக்தர்கள் ஒருவருக்குக்கூட தொற்று ஏற்படவில்லை.






