திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவு
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 22-ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
மேலும் பள்ளிக்கு விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.





