கோவை: தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – சிசிடிவி காட்சி
கோவை ஆனைமலையை அடுத்த குப்பிச்சிப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்திற்கு அருகே நடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது.
யானை, காட்டெருமை,பன்றி, சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி அப்பகுதியில் உலாவுவது அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






