--- --:--:-- --

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்..!

8

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களுக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வீடியோ காலில் ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. கோவையை சேர்ந்த ராமு என்பவர் குடும்பத்தோடு கனடாவில் வசித்து வருகிறார்.

 

மூளை புற்றுநோய் பாதித்து மூன்றாம் நிலையில் உள்ள ராமு கமல்ஹாசனை சந்தித்து பேசவேண்டும் என அவ்வப்போது குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளார். மேலும் தனது இரண்டாவது மகனுக்கு விருமாண்டி என செல்ல பெயர் வைத்துள்ளார்.

 

இந்த நிலையில் கமல்ஹாசன் மீதான ராமுவின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட குடும்பத்தினர் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்துள்ளனர்.

 

வீடியோ காலில் பத்து நிமிடங்களுக்கு மேல் வீடியோ காலில் பேசிய கமல்ஹாசன் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து அதோடு தனது சினிமா மற்றும் அரசியல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon