விஜய்யை எதிர்த்து தி.மு.க வேட்பாளர்களுக்கு கமல் பிரசாரம்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி 17-ம் தேதி சென்னையின் துறைமுகம், பெரம்பூர் பகுதிகளில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார் கமல். தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன், 20-ம் தேதி விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு உள்பட திருச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.





