விடுதலை கோரிய நளினி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!
விடுதலை கோரும் நளினி வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி விடுதலை செய்யக் கோரி நளினி ரவிச்சந்திரன் வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்றாலும் உயர்நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதால் மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப கூடாது என நளினி தரப்பு தெரிவித்துள்ளது.






